Chess விளையாட்டடில் நோர்வே முதலிடம் பெற்றது Reviewed by Momizat on . உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றுவந்ததது. மொத்தம் 12 சுற்று ஆட்டத்தில் 10ஆவது ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆனந்த் வெற்றி பெற்றே ஆக உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றுவந்ததது. மொத்தம் 12 சுற்று ஆட்டத்தில் 10ஆவது ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆனந்த் வெற்றி பெற்றே ஆக Rating: 0
You Are Here: Home » Front page » Chess விளையாட்டடில் நோர்வே முதலிடம் பெற்றது

Chess விளையாட்டடில் நோர்வே முதலிடம் பெற்றது

Carsenஉலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றுவந்ததது. மொத்தம் 12 சுற்று ஆட்டத்தில் 10ஆவது ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆனந்த் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

ஏனெனில் இந்த ஆட்டம் டிராவானால் நோர்வேயைச் சேர்ந்த கார்ல்சன் சாம்பியன் பட்டம் வெல்வது உறுதி என்ற நிலையில் இருந்தது. ஆட்டம் தொடங்கியது முதலே பெரும் பரபரப்பாக இருந்தது. நீண்ட நேரப்போராட்டத்திற்கு பின் 65வது காய்நகர்த்தலில் ஆட்டத்தை டிராவில் முடிக்க இருவரும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து கார்ல்சன் 6,5 புள்ளிகள் பெற்று உலசக சாம்பியன் ஆனார். விஸ்வநாதன்ஆனந்த் 3,5 புள்ளிகள் மட்டுமே பெற்றார்.

சாம்பியன் பட்டத்தை நோர்வேயைச் சேர்ந்த கார்ல்சன் வென்றதால் மீதமுள்ள இரண்டு போட்டிகள் நடைபெறாது.  23 வயதில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள கார்ல்சனுக்கு,  செஸ் போட்டிகளில் உலகசாம்பியன் பட்டம் வென்ற முதல் நார்வே வீரர் என்ற பெருமை கிடைத்துள்ளது,

இந்த தொடரில் வென்ற நோர்வேயைச் சேர்ந்த கார்ல்சனுக்கு ரூ.8.40 கோடியும், ஆனந்த்க்கு ரூ.5.60 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.  விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment

 

Scroll to top