இது ஏறத்தாள 30 வருங்களுக்கு முன்னான கதை. உலகின் நினைவற்று மனதின் போக்கில் எம்மை மறந்து வாழ்திருந்த காலத்தில் இப்படி எத்தனையே கதைகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் இக் கதை மடடும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. ஒரு தலை ராகம், பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள் என காதல் படங்களின் வழியாக எங்கள் ஊரிலும் வழிந்தோடிக் கொண்டிருந்தது, காதல். என்னையும் ஒருத்தி பெரும்பாடுபடுத்தினாள். அது வெறொரு கதை. அது பற்றி 60 வய ...
Read more ›மாவீரர் யாரோ என்றால்…! — நவமகன் —
கார்த்திகை இருபத்தி ஏழு. வேலையிலிருந்து அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு அறக்கப் பறக்க வீட்டிற்கு வந்து குளித்து உடைகளை மாற்றிக் கொண்டு மீண்டும் மாவீரர்தின விழா நடக்கும் மண்டபத்தை நோக்கி காரில் பறந்துகொண்டிருந்தேன். என் மனத்திரையில் மாவீரர்களாகிவிட்ட உறவுகளினதும் நண்பர்களினதும் தெரிந்தவர்களினதும் முகங்களே படங்களாய் ஓடிக்கொண்டிருந்தன. என் இதயம் பாராங்கல்லாய் கனத்துக் கிடந்தது. நீண்டதொரு பெருமூச்சு என ...
Read more ›இப்பவேயா – அ. முத்துலிங்கம் (கனடா)
பள்ளிக்கூடங்கள் சிறுவர்களை தண்டிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் என்பதை அவன் அந்த வயதிலேயே கண்டுபிடித்துவிட்டான். பள்ளிக்கூட நாட்களில் காலையில் அவனை உருட்டி உருட்டித்தான் எழுப்பவேண்டும். பள்ளிக்கு போகமுன்னர் ஒவ்வொருநாளும் உணவு மேசையை சுற்றி பத்து தடவை ஓடிவிட்டுத்தான் புறப்படுவான். ஆனால் சனி, ஞாயிறு நாட்களில் அதிகாலையிலேயே எழும்புவான். அந்த நாட்களில் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கக்கூடாது என்பதில் அவனுடைய உறுதி ...
Read more ›மண்கணக்கு – தமயந்தி (1997)
அறிந்துகொண்டுவிட்டது. ராசதுரையப்புவின் காறிக் கனைக்கும் ஒலியில் விழித்துக்கொண்ட அயலட்ட நாய்களின் அன்புக் குரல்களும் ஊளையிடல்களும் அவர் வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிட்டாரென்பதற்கு கட்டியம் கூறும். இது வழமை. நீண்டகால வழமை. ராசதுரையப்புவுக்கும் அன்னபூரணம் ஆச்சிக்கும் பிள்ளைகள் இல்லை. அந்தக்குறையைத் தீர்க்கவும் மறக்கவும் கிராமத்துப் பிள்ளைகளில் பாசத்தையும் பரிவையும் வழங்கினார். தாராளாமாகவே அள்ளி வழங்கினார். பாடச ...
Read more ›ரதியக்கா – தியாகலிங்கம்
சந்திரனைப் போன்ற இரதியக்காவின் வட்டமுகம் அடிக்கடி சூரியனைப் போலச் சிவந்து போவது உண்டு. பெண்விடுதலை பற்றி இரதியக்கா கதைக்கத் தொடங்கினால் சூரியனைத் தலைக்கு மேல் வைத்ததாகக் கோபம் அவவிடம் இருந்து பீறிட்டுப் பாயும். அவவின் கோபாக்கினி தாங்கதா பல ஆண் சூரியர்கள் முகத்தைச் சந்திர கிரகணமாக்கிக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியே நழுவிவிடுவார்கள். அப்படி ஆண்கள் வெளியே செல்வது ரதியாக்காவுக்குப் போரில் புறமுதுகிட்டு ஓடும ...
Read more ›அம்மா – தியாகலிங்கம்
அது என்பிடரி பிடித்து எப்போதும் முன்னே தள்ளிக்கொண்டு இருக்கிறது. நான் அம்மாவிடம் போகாமலும் விடலாம். நான் அங்கு போனாலும் போகாவிட்டாலும் அம்மாவைப் பொறுத்தவரையில் அது ஒன்றுதான்.போக வேண்டும் என்பது என் அவா மட்டும் அல்ல, அது தர்மீகமும் ஆகும். நான் போகாமல் விடலாம். அதில் என் சுயநலத்தைக் காவாந்து செய்யலாம். அசௌகரியத்தைக் குறைத்துக் கொள்ளலாம். நான் அம்மாவிடம் போகாமலும் விடலாம். ஏகலைவன் கட்டைவிரலைக் குருதட்சனணயாகக் ...
Read more ›