You Are Here: Home » இலக்கியம் » கவிதை

மார்போடு வெள்ளை இதழ்கள் – நாவுக் அரசன்

விழுந்த குடை மரங்கள் இரவோடிரவாக நிறங்களை இழந்தன.. பெருத்து மீண்டும் மீண்டும் நிரப்பிக் கொண்டு வழிந்த தடங்களில் தெருக்களின் பெயர்கள் அழிந்தன.... விசையறு இரவு முழுவதும் பயங்காட்டியபடி நட்சத்திரங்கள் மறையத் தொடங்க பறவைகள் திசைகளை மறந்தன .. கோலங்களில் விடுதலையாகி நிற்கின்ற சொங்க்ஸ் வான் பனிச்சறுக்கு வழியின் உறைந்து போயிருந்த பாளங்களில் மீண்டும் பாதங்கள்... குளிர்காலம் மீதான கோபத்தையும் வழியின்றி அகப்பட்ட வருத்த ...

Read more

சுய நிர்ணயஉரிமை – நாவுக்கரசன்

சுயநிர்ணய உரிமை என்ற புத்தகம் எழுதிக்கொண்டிருந்தபோது அவன் கண்கள் கட்டப்பட்டுக் கடத்தப்பட்டான், அவனைக் கடத்திய காவல் தெய்வங்கள் ஏன்  கடத்தப்பட்டான் என்று வருசங்களாய் வாயால தன்னும்   சொல்லவேயில்லை, ஒரேயொரு  நாள் விசாலமான ஒரு விசாரணை அதிகாரி அவன் காதிரண்டில் முடிந்தவரை அறைய அந்த நிமிடமே அவன் செவிடானான் , அவர் கேட்குதா எண்டு சைகையில் கேட்டார், அவன் கேட்கவில்லை எண்டு சைகையில் சொன்னான், அதன் பிறகுதான் அதிகாரி அதி ...

Read more

ஒரு பைத்தியக்காரியின் சுவர் – சுரபி

நான் இந்த இடத்துக்குரியவளில்லை என்ற உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன் இசையில் போலி அசைவுக்கும் பக்குவப்பட்ட பாவத்திற்கும் வித்தியாசம் அறிவேன் என்றதனால் தேசமென்றும் இனமென்றும் உரக்கப்பேசி வெற்றுணர்ச்சி செய்யும்போது வலதுகுறைந்தவள்போல நான் ஓரமாய் உட்காந்துகொள்கிறேன் கொலைக்களங்களில் கைவிடப்பட்ட மனிதர்களின் படத்தொகுப்புகளை திறக்கமுன்பே ஏற்படும் அசௌகரிய உணர்வு போல உணர்ச்சி மனிதர்களைக் கண்டும் மனம் ஆதங்கத்துடன் வில ...

Read more

ஒரு கவிதை – நாவுக்கரசன்

இனிமேல் கதைக்க போறதில்லை, என்ற கடைசி முடிவான அந்த கசப்பான நிகழ்வை அவன் நேராக எழுதியபோது ஒரு கட்டுரை வந்தது, உண்மையாக எழுதிய போது உரைநடை வந்தது , அதையே தர்க்கித்து எழுத தத்துவம் வந்தது , கவலையா எழுத தொடங்கவே கண்ணீர் அஞ்சலிபோல அழுதது, புதுமையா ஜோசிக்க புதுக்கவிதை பாய்ந்தது , மரபோடு ஜோசிக்க மரபுக் கவிதை மயங்கியது , கடைசியில் மரபை வேண்டுமென்றே உடைத்து, மனிதாபிமானத்தை நிராகரித்து, குற்றவுணவு இல்லமால் , குறுக்கு ...

Read more

Kallarai nerunjikal – கல்லறை நெருஞ்சிகள் – மைத்ரேயி. ( கவிதை – 2010 )

நேரே வெளிப்படுத்த முடியாத அரசியல் உணர்வுகளை மொழிபெயர்ப்புக் கவிதைகள் மூலம் வெளியிட்டுள்ளார் மைத்ரேயி. எண்பதுகளிலிருந்து கவிதைகளை எழுதிவரும் கவிஞர் மைத்ரேயி படைப்புலகில் பலராலும் நன்கு அறியப்பட்டவர். தனித்துவமும் புதிய அனுபவ வீச்சும் கொண்ட அவரது கவிதைகள் முதன் முதலாக கல்லறை நெருஞ்சிகள் எனும் தொகுப்பாக வெளிவந்துள்ளது. ஆரோக்கியமான சமூகப்பார்வை கொண்டவர் மைத்ரேயி. மற்றைய கவிஞர்களைப் போலவே போராட்டச் சூழலை, இனப்போ ...

Read more

எப்போ திருந்துவோம்? – உமைபாலன்

லட்சக்கணக்கில் நம்மினம் வீழ்ந்தது லட்சியங்கள் சச்சரவில் செத்தது! ஒன்றாய் இரண்டாய் ஒவ்வொன்றாய்த் தின்று ருசித்த பேரினவாதம் அது போதாமல் அத்தனை பேரையும் அப்படியே அள்ளிவாய்க்குள் போட்ட முள்ளிவாய்க்கால் அவலம் கண்டும் நாம் திருந்தவில்லை!அகிலமே எமை அழிக்கத்தான் தருணம் பார்த்ததென்பதைத் தெரியாமல் அழித்தவன் யாரென்பதையும் அறியாமல் - எமை உதைத்தவரிடமே உதவி கேட்டு ஓடினோம்! நாட்டில் நடப்பது தமக்குத் தெரியாதெனப் போட்டிபோட் ...

Read more

தான் தின்னி மனிதர் – சுரபி

தம்மிருப்புத் திடமாகியபின் யாவருக்கும் புலம்பெயர் நாட்டில் தற்போதைய தேவை ஒரு குழு ஒரு பதவி இருப்பின் அடையாளம் மனிதநேய விவாதம் சிலவும் உணர்வுட்டும் மொழியும் ஏதோ ஒரு கலையும்   தேவைப்படலாம் இனி ஒரு சாய்வு நாற்காலி சாம்பல் அனுப்ப எடுபிக்கும் முட்டி!   அழித்துப் போடவென்றே வயிறூதிக் கர்ப்பம் தரித்து சந்தன, அபிசேகப் பெறுதலுடன் அருள்பாலிக்கும் மனித விக்ரஹங்களாய்   சமூகஉயர்வை தான் தின்னி மனிதர்கள் முழ ...

Read more

எல்லாம் ஒரே தோலினால் ஆனவைதான் -பானுபாரதி

மூக்குப்பேணியெல்லாம் ஒரே உலோகத்தினால் ஆனவைதான். திசைகள். வடக்கென்றும், கிழக்கென்றும் என்னதான் கதியால் போட்டுக் கூத்தாடினாலும் ஆண்ட பரம்பரை மகுடக் கனவு எல்லா தரப்புக்கும் அழிந்து போகாதவைதான். யாழாதிக்க வசந்தமும் கிழக்கு மேட்டின் முல்லையும் ஏகபோக ஆளுகையின் வெண்புறாவும் கறுப்பு வெள்ளைக் காலத்துக்கும் முன், வெளியிலாடிய வட்டக்களரி, வரப்பிலாடிய கும்மி, கோல், அலையில் பாடிய அம்பா காலத்துக்கு முன்பிருந்தும் இன்றைய உ ...

Read more

செக்கலுக்க பெய்த துமியில வெள்ளாப்பில முளைச்ச சிட்டுக்குருவி -பானுபாரதி-

உங்களது ஆதித்தகப்பன் வேரடியிலிருந்து கடந்த கணத்தில் முகை வெடித்த உச்சிப் பூ வரைக்கும் நீண்டநெடிய உங்கள் பெருமைக்குரிய வரலாறானது கல்லென மலையென குகையென சுவரென ஓலையென சீலையென கொட்டிக் கிடக்கிறதென்பதை வெள்ளாப்பில் முளைத்த இந்த சிட்டுக்குருவியின் குட்டி அறிவுக்கும் கொஞ்சமேனும் எட்டாமலில்லை.   ஆயினும் நேற்று முளைத்த சிட்டுக் குருவிக்கும் கூடுகளும் குஞ்சுகளும் குட்டிக் குட்டிக் கதைகளும் மகிழ்வும் வேதனைகளும் உ ...

Read more

இரண்டாவது இறப்பிற்கான உயிர் – கவிதா

அது பறந்து பறந்து உதிரவிட்ட இறகுகளில் வருடப்பட்ட காற்று … இன்னும் ஈரலிப்பாய் என் கைக்குள் கசியும் இந்த அந்தி புதியது   சாரல் தெளித்த ஏழு நிறங்களின் வளைவுகளில் மழை நின்ற பின்னும் நான் சுருண்டு கிடக்கும் இந்த வானம் நிறங்களற்றது   நேற்று அடித்த இரவில் கொட்டிய நட்சத்திரங்கள் அனைத்தும் யாருடைய இரவலோ அவர்களே எடுத்துப்போங்கள்   நினைவுகளில் துடித்தெழுந்து மென்கனவுகளை ரசித்த முழு நிலாக்காலங்கள் ஏகமனதாய் திருப்பிக்கொ ...

Read more
Scroll to top