விமர்சனம் அல்ல விதந்துரைப்பு – .-திருமலை கா.சிவபாலன். Reviewed by Momizat on . சென்ற ஞாயிற்றுக்கிழமை (19.04.2015) இல் ஒசுலோவில் ஒன்றல்ல இரண்டு அரங்கேற்றங்கள் ஒரே மேடையில் லில்லேஸ்ரோம் பண்பாட்டு மையத்தில் (Lillestrom Kultursenter) இடம்பெற்ற சென்ற ஞாயிற்றுக்கிழமை (19.04.2015) இல் ஒசுலோவில் ஒன்றல்ல இரண்டு அரங்கேற்றங்கள் ஒரே மேடையில் லில்லேஸ்ரோம் பண்பாட்டு மையத்தில் (Lillestrom Kultursenter) இடம்பெற்ற Rating: 0
You Are Here: Home » Front page » விமர்சனம் அல்ல விதந்துரைப்பு – .-திருமலை கா.சிவபாலன்.

விமர்சனம் அல்ல விதந்துரைப்பு – .-திருமலை கா.சிவபாலன்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை (19.04.2015) இல் ஒசுலோவில் ஒன்றல்ல இரண்டு அரங்கேற்றங்கள் ஒரே மேடையில் லில்லேஸ்ரோம் பண்பாட்டு மையத்தில் (Lillestrom Kultursenter) இடம்பெற்றது. செல்வி துஷ்யந்தி இராஜகுலசிங்கத்தின் வாய்ப்பாட்டு, வீணை அரங்கேற்றம் நோர்வே நுண்கலை மன்றம் நடத்தும் ஆசிரியர்தர தேர்வாகவும் அமைந்தது. நோர்வே நா ட்டில் இடம்பெறும் முதலாவது வீணை அரங்கேற்றம் எனக் கூறப்படும் இநநிகழ்ச்சி துஷ்யந்தியின் குரு இசைக்கலாவித்தகர் பாலநாயகி பாலசுப்ரமணியம் நடாத்தும் முதலாவது அரங்கேற்றமாகவும் அமைந்தது.
ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்ற இரண்டு அரங்க அளிக்கைகளையும் அல்லது அரங்கேற்றங்களையும் அல்லது கச்சேரிகளையும் {வீணையையும்) இரசிகர்களுக்கு தொடர்ந்து மகிழ்சியை கொடுக்குமாறு இளம் கலைஞர் மிக லாவகமாகவும் அனாயசமாகவும் கையாண்டிருந்தார்.

வீணை அளிக்கை நிரம்ப சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளை கொண்டிருக்க இசைக் கச்சேரி தண்டபாணி தேசிகர்,சுத்தானந்த பாரதி, சுப்ரமணிய பாரதி, பெரியசாமி தூரன், லால்குடி ஜெயராமன், ஆகியோரோடு நம்மூர் கவிஞர் கார்மேகம் நந்தா ஆகியோரின் தமிழ் உருப்படிகளைக் கொண்டிருந்தது தமிழிசை சுவைஞர்க்கு பெரு விருந்தாய் அமைந்தது.

நீண்ட நேரத்தை தம் முதல் கச்சேரியில் எடுத்த இளம் கலைஞர் குரல் இசை அளிக்கையின் கடைசிக்கட்டங்களில் சற்று களைத்துக் காணப்பட்டது தவிர்க்க முடியாததே. எனின் வாய்ப்பாட்டு முதலில் இடம் பெற்றிருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும். அப்படிச் செய்திருப்பின் வீணை கச்சேரியில் தனி ஆவர்த்தனை நேரத்தை குறைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

அணி சேர் கலைஞர்கள் யாவருமே இளம் கலைஞர்க்கு மிக அனுசரணையாக வாசித்து மிருதங்க வித்துவான் கணேசன் சுந்தரமூர்த்தி, மிருதங்க கலாஜோதி அர்ச்சுனா விஜேந்திரா , வயலின் இசைகலாஜோதி ரோஸிக்கா ஸ்ரீகாந்தன், கடம் இந்துஜன் சண்முகராஜா, இளம் கலைஞர் கெஞ்சிரா அபிராம் சிவபாலகுமார்,வீணை இசைக்கலாஜோதி அரண்யா ஆதவன் கச்சேரி களை கட்ட உதவினார்கள் என்றால் மிகையாகாது.
துஷ்யந்தியின் மேடை பிரசன்னம் (stage presence) அபாரம்! பல கச்சேரிகளை செய்த வித்துவானின் தோரனையை காணக் கூடியதாக இருந்தது. ராஜெஷ்போல அல்ல,வீணை பாலச்சந்தர், சிட்டி பாபு,போல, வாய்ப்பாட்டு, வீணை மேதை சந்தானகோபாலன்போல செல்வி துஷ்யந்தி மிளிர மனம் நிறைந்த வாழ்த்துக்கள். துஷ்யந்தி சப்தஸ்வரா இசைமன்ற ஸ்தாபகர் [இசைக்கலாவித்தகர் பாலநாயகி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கிடைத்த கொடையே.அவரை மெருகுபடுத்திய குரு பாகலநாயகிக்கும், ஊக்கம் கொடுத்த தமிழ் ஆர்வலரான பெற்றோர் திரு,திருமதி இராஜகுலசிங்கம் அவர்கட்கும் என் வாழ்த்துக்கள்.
அரங்கேற்றம் என்பது முடிவல்ல தொடக்கமே என்பதை துஷ்யந்தி கருத்தில் கொண்டு மென்மேலும் தம் கலைத்திறனை வளர்த்துக்கொள்ளல் வேண்டும். மாதுமை உடன் உறை கோணேசர் அதற்கு துணைபுரிவாராக. .
veenai2

Leave a Comment

 

Scroll to top