முள்ளிவாய்க்கால் வலிகளைப் பேசும் 3 நூல்கள் – அறிமுகம் Reviewed by Momizat on . எழுநாவின் வெளியீடுகளான பின்வரும் நூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. யுகபுராணம் ( நிலாந்தன்) கிளிநொச்சி போர்தின்ற நகரம் (தீபச்செல்வன்) படுவான்கரை (சஞ்சயன்) பண்டைத எழுநாவின் வெளியீடுகளான பின்வரும் நூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. யுகபுராணம் ( நிலாந்தன்) கிளிநொச்சி போர்தின்ற நகரம் (தீபச்செல்வன்) படுவான்கரை (சஞ்சயன்) பண்டைத Rating: 0
You Are Here: Home » Front page » முள்ளிவாய்க்கால் வலிகளைப் பேசும் 3 நூல்கள் – அறிமுகம்

முள்ளிவாய்க்கால் வலிகளைப் பேசும் 3 நூல்கள் – அறிமுகம்

எழுநாவின் வெளியீடுகளான பின்வரும் நூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

யுகபுராணம் ( நிலாந்தன்)
கிளிநொச்சி போர்தின்ற நகரம் (தீபச்செல்வன்)
படுவான்கரை (சஞ்சயன்)
பண்டைத் தமிழர் சுவாமி ஞானப்பிரகாசர்)
தமிழ்ப் பாஷை (சி. த. சரவணமுத்துப்பிள்ளை)

நிலாந்தன் சிறப்புரையாற்றுவார்.

***********

யுகபுராணம் ( நிலாந்தன்)

முள்ளிவாய்கால் காலத்தில், உத்தரிப்புக்களால் நிறைந்த அவல வாழ்வின் வார்த்தைகளே இக்கவிதைகள். .

கிளிநொச்சி போர்தின்ற நகரம் (தீபச்செல்வன்)

கொடும் அழிவுகளை விதைத்த வன்னி யுத்ததத்தின் பின்னர் தனது சொந்த நகரத்தின் மனிதர்களைத் தேடி அலைந்த தீபச்செல்வன், போரின் கொடிய நாட்கள் விழுங்கிச் செரித்த அந்த அப்பாவி மக்களின் கதைகளை அருகிருந்து இரத்தமும் சதையுமாக இந் நுாலில் பதிவு செய்திருக்கின்றார்.

படுவான்கரை (சஞ்சயன்)

போரின் சகல அடிகளையும் மௌனமாகத் தாங்கி தாம் அழிவுற்ற கதைகளை வெளிச்சொல்ல வழியேதுமற்று புதைந்து கிடந்த படுவான்கரைப் பிரதேச மக்களினதும், விடுதலைப்போரில் இணைந்து போராடி இன்று எல்லோராலும் கைவிடப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளினதும் கதைகளை இந்நுால் பேசுகிறது.

Norway(1)

Leave a Comment

 

Scroll to top