மார்போடு வெள்ளை இதழ்கள் – நாவுக் அரசன் Reviewed by Momizat on . விழுந்த குடை மரங்கள் இரவோடிரவாக நிறங்களை இழந்தன.. பெருத்து மீண்டும் மீண்டும் நிரப்பிக் கொண்டு வழிந்த தடங்களில் தெருக்களின் பெயர்கள் அழிந்தன.... விசையறு இரவு முழ விழுந்த குடை மரங்கள் இரவோடிரவாக நிறங்களை இழந்தன.. பெருத்து மீண்டும் மீண்டும் நிரப்பிக் கொண்டு வழிந்த தடங்களில் தெருக்களின் பெயர்கள் அழிந்தன.... விசையறு இரவு முழ Rating: 0
You Are Here: Home » Front page » மார்போடு வெள்ளை இதழ்கள் – நாவுக் அரசன்

மார்போடு வெள்ளை இதழ்கள் – நாவுக் அரசன்

winter-blue1913Jonaslie
விழுந்த
குடை மரங்கள்
இரவோடிரவாக
நிறங்களை
இழந்தன..
பெருத்து
மீண்டும் மீண்டும்
நிரப்பிக் கொண்டு
வழிந்த தடங்களில்
தெருக்களின்
பெயர்கள்
அழிந்தன….
விசையறு
இரவு முழுவதும்
பயங்காட்டியபடி
நட்சத்திரங்கள்
மறையத் தொடங்க
பறவைகள்
திசைகளை
மறந்தன ..
கோலங்களில்
விடுதலையாகி
நிற்கின்ற
சொங்க்ஸ் வான்
பனிச்சறுக்கு வழியின்
உறைந்து போயிருந்த
பாளங்களில்
மீண்டும் பாதங்கள்…
குளிர்காலம் மீதான
கோபத்தையும்
வழியின்றி அகப்பட்ட
வருத்தத்தையும்
தள்ளி வைத்து
நினைவுகள்
பேசுகிற நேரங்களில்
சறுக்கி விழுந்த
ஞாபகம்
தவிர்க்க இயலாவிட்டாலும்
மீண்டும்
உந்தி எழுந்ததை
மறக்கவே முடியவில்லை.

***
ஒஸ்லோ 24.02.15

Leave a Comment

 

Scroll to top