IBC தங்கக் குரல் பாடற்போட்டியில் விதிமுறைகள் மீறப்பட்டமைபற்றிய உரையாடல் – மகேசரட்ணம் Reviewed by Momizat on . Lebara mobile ஆதரவுடன் IBC நிறுவனத்தால் நோர்வேயில் நடாத்தப்பட்ட ஐரோப்பிய ரீதியிலான தங்கக்குரல் தேடும் போட்டியில் விதிமுறைகள் மீறப்பட்டன என்பதை சுட்டிக்காட்டி "N Lebara mobile ஆதரவுடன் IBC நிறுவனத்தால் நோர்வேயில் நடாத்தப்பட்ட ஐரோப்பிய ரீதியிலான தங்கக்குரல் தேடும் போட்டியில் விதிமுறைகள் மீறப்பட்டன என்பதை சுட்டிக்காட்டி "N Rating: 0
You Are Here: Home » Front page » IBC தங்கக் குரல் பாடற்போட்டியில் விதிமுறைகள் மீறப்பட்டமைபற்றிய உரையாடல் – மகேசரட்ணம்

IBC தங்கக் குரல் பாடற்போட்டியில் விதிமுறைகள் மீறப்பட்டமைபற்றிய உரையாடல் – மகேசரட்ணம்

Lebara mobile ஆதரவுடன் IBC நிறுவனத்தால் நோர்வேயில் நடாத்தப்பட்ட ஐரோப்பிய ரீதியிலான தங்கக்குரல் தேடும் போட்டியில் விதிமுறைகள் மீறப்பட்டன என்பதை சுட்டிக்காட்டி «Nortamil» » Facebook» ஆகிய ஊடகங்களினூடாக பலர் வைத்த விமர்சனங்களையும் கருத்துக்களையும் தொடர்ந்து, அப் போட்டியில் பங்குபற்றிய அனைத்துப் போட்டியாளர்களும் அவர்களது பெற்றோர்களும் ஒருங்கமைப்பாளரினால் 30/10 அன்று கருத்துப்பகிர்வுக்கு ஒன்றிற்காக அழைக்கப்படிருந்தனர்.

போட்டியில் பங்குபற்றியவர்களில் ஒன்பதுபேர் அங்கு வருகை தந்திருந்திருந்தனர். அங்கு வந்திருந்த அனைவரும் போட்டியில் மீறப்பட்ட விதிமுறைகளை சுட்டிக்காட்டி தமது அதிருப்தியையும் ஆதங்கத்தினையும் தெரிவித்ததுடன் சில ஆரோக்கியமான கருத்துக்களையும் முன்வைத்தனர். முக்கியமாக சுட்டிக்காட்டிய விடயங்களாக 17 வதாக ஒருவரை இணைத்தமை, போட்டியாளர்களை 2குழுக்களாகப்  பிரித்தமை, 2 வது சுற்றில் 8 பேருக்குப்பதிலாக எவ்வித அறிவிப்புமின்றி 9 வதாக ஒருவரை இணைத்தமை, கடைசி சுற்றில் 4 பேருக்குப் பதிலாக 5 பேரை எடுத்திருக்கலாம் என்ற கருத்து போன்றவற்றை குறிப்பிடலாம்.

அதனைத்தொடர்ந்து ஒருங்கமைப்பாளர் தமது பக்க நியாயத்தை முன்வைத்தார். தேவையேற்படின் விதிமுறைகளை மாற்றுவதற்குரிய அதிகாரம் தங்களிடம் இருந்ததையும் அது விதிமுறைகள் அடங்கிய கையேட்டில் கடைசியில் குறிப்பிடப்பட்டிருந்ததையும் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் நிகழ்ச்சித் தொகுப்பாளர், அப்துல் ஹமீட் அவர்கள் பாட்டுக்கு பாட்டு நடத்திய போது மிகவும் இனிமையாகப் பாடிய ஒருவரே, அப்துல் ஹமீட் அவர்களின் பரிந்துரையின் பேரில் புதிதாக இணைக்கப்பட்டார் எனவும் முதல் 15 பேர் பாடும் வரையிலும் அது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தமையே ஆரம்பத்தில் 17 வது போட்டியாளரைப் பற்றிக் குறிப்பிட முடியாமல் போனதற்கான காரணமாக கூறப்பட்டது.

இது அங்கு வந்திருந்த ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத்தாக இருந்தது. அது மட்டுமன்றி தனி ஒருவரிடம் அனைத்து அதிகாரங்களும் எப்படி ஒப்படைக்கப்பட்டது என்பதும் விதிமுறைகளை வரையறுத்தவர்களே அவற்றை தங்கள் விருப்பிற்கமைய மாற்றலாம் எனில் விதிமுறைகள் எதற்காக என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டது.

அதனையடுத்து  ஒருங்கிணைப்பாளர் புதிதாக ஒரு போட்டியாளரை இணைத்ததற்காக தனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொண்டார். முதல் சுற்றில் 17 பேரை எடுத்ததால் தான் இரண்டாவது சுற்றில் 9 வதாக ஒருவரை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார். அப்படியாயின் கடைசி சுற்றில் ஏன் 5 பேரை எடுக்கவில்லை என கேட்கப்பட்டதற்கு அது இன்னொரு விதிமுறைமீறலாகி விடும் என்பதே காரணம் எனக் கூறினார்.

அத்துடன் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி இனிவரும் காலங்களில் இப்படியான தவறுகள் நடைபெறுவதை தடுக்க முயல்வதாக உறுதியளித்துள்ளார்.

எது எப்படியிருந்தாலும் நடந்தவை அனைத்தும் நடந்தவையே. விளைவுகளை சீர்தூக்கிப் பார்த்து தவறுகளை திருத்திக் கொள்ள முனைவது வரவேற்கத்தக்க நல்ல விடயமே. ஊடகங்கள் மூலமும் நேரடியாகவும் பலராலும் முன்வைக்கப்பட்ட நல்ல கருத்துக்கள், விதிமுறைகளை மீறியவர்களும் அதற்கு காரணமானவர்களும் தமது பிழைகளை உணர்ந்து கொள்ள உதவுவதுடன் இனிவரும் காலங்களில் இப்படியான முறைகேடுகள் ஓரளவேனும் குறைந்து, பெரியவர்கள் இளைஞர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் நல்ல வழிகாட்டிகளாகவும் இருப்பார்கள் என நம்புவோமாக.

 

Comments (1)

  • Garthig

    Garthig Vaira முடிந்த விடயத்தை கிளறுவதாக சிலர் நினைப்பார்கள் அனால் எமது சமூகம் பல அடிப்படை விடயங்களை திருத்திக்கொண்டால் தான் முன்னேறிச்செல்ல முடியும் எமது இளையோர் எம் கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம் இப்படியான விடயங்களை விவாதிக்க வேண்டும்
    1. விதிமுறைகள் போட்டியாளர்களுக்கு மட்டும் தானா ?,

    2. அதை அமைப்பாளர்கள் மீறலாம் என்று ஓர் விதிமுறைய உருவாக்க முடியுமா? ¨

    3. இப்படியான விதிமுறைகளை கொண்ட போடிகளில் எம் இளையோர் பண்குகொள்வதால் எப்படியான தமிழ் உணர்வுகள் பெரியோர்களிடம் இருந்து இளையோர் களிடம் போய்சேரும் ?

    4. நடத்தப்படும் போட்ட்டிகள் எல்லோருக்கும் சமமான சந்தர்ப்பங்களை வழங்கக வேண்டுமா ?
    இந்தப்போட்டியில் அது வழங்கப்படவில்லை என்பது பல விடயங்களில் புலப்படுகிறது இந்த கட்டுரையை முழுமையாக வசித்தால் அது புலப்படும்

    Svar

Leave a Comment

 

Scroll to top