பாரதியுடன் மூன்று நாட்கள் …! – கார்மேகம் நந்தா Reviewed by Momizat on . நல்லிசை நாட்டிய வேள்வி - 2014 இரவுச்சூரிய தேசத்தில் கலந்து கொண்ட அனைவரையும் சமீபகாலத்தில் மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி! என் நான்கு தசாப்த காலக் கலைப்பயணத்தில் நான் நல்லிசை நாட்டிய வேள்வி - 2014 இரவுச்சூரிய தேசத்தில் கலந்து கொண்ட அனைவரையும் சமீபகாலத்தில் மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி! என் நான்கு தசாப்த காலக் கலைப்பயணத்தில் நான் Rating: 0
You Are Here: Home » Front page » பாரதியுடன் மூன்று நாட்கள் …! – கார்மேகம் நந்தா

பாரதியுடன் மூன்று நாட்கள் …! – கார்மேகம் நந்தா

நல்லிசை நாட்டிய வேள்வி – 2014 இரவுச்சூரிய தேசத்தில் கலந்து கொண்ட அனைவரையும் சமீபகாலத்தில் மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி! என் நான்கு தசாப்த காலக் கலைப்பயணத்தில் நான் மறக்கவே முடியாத நிகழ்ச்சி! ஏன்..மறந்துவிடவே கூடாத நிகழ்ச்சி! மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேரன். இசைக்கலைஞர் ராஜ்குமார் பாரதி தலைமை தாங்க, அடையாராரின் முதன்மை மாணவி ரோஜா கண்ணன், பத்மா சுப்பிரமணியம் அவர்களின் மாணவன் ந. ஶ்ரீகாந்துடன், சுதாராணி ரகுபதி அவர்களின் மாணவி பிரியா முரளி என்று தென்னகத்தின் தொழில் முறைக்கலைஞர்கள் ஒரே மேடையில் சும்மா…..அதிரவைத்ததில் உள்ளூர் இசைக்கலைஞர்கள் திரைமூடித் திறந்தபடி.. அடிக்கடி சுருதி சேர்த்தார்கள்..!

அதுவும் பாரதியின் ஆசைமுகம் மறந்து ( வெறுத்து ) போச்சே…போச்சே… போ…ச்….சே….!
என் அன்பிற்குரிய இசை ஆசிரியைகளே நீங்கள் இன்னும் கொஞ்சம் நேரத்தையும் பணத்தையும் பெற்றோரின் உதவியுடன் செலவு செய்திருந்தால் நிச்சயம் உள்ளூரிலும் நல்ல இசைத் திறமைகளை அடையாளம் காட்டியிருக்கலாமே ஒருவேளை சில நடன ஆசிரியர்களைப்போலவே நீங்களும் இன் நிகழ்வின் சிறப்பினை அறியவில்லையோ என்ற ஐயப்பாடு எழுந்தாலும்  மாணவர்களைப் போலவே நிகழ்வு மண்டபத்தில் நீங்கள் காட்டிய ஆர்வமும்…அக்கறையும் என் எண்ணத்தை மறுக்கவைக்கின்றதே…!

நாதம்.. நாதம்..நாதம்…
நாத.த்தேயோர் நலிவுண்டாயின்…
சேதம்… சேதம்…சேதம்..
அதுமட்டுமா…
பண்ணே… பண்ணே..பண்ணே…
பண்ணிற் கேயோர் பழுதுண்டாயின்…
மண்ணே…மண்ணே….மண்ணே…
இதையும் பாரதி எழுதிவைத்திருந்ததால் படித்துவிட்டேனே…என் செய்ய? மாணவச் செல்வங்களே. உங்களைக் குறைகூறுவது என் நோக்கமல்ல. அடுத்த அரங்கத்தில் உங்கள் திறமைகள ஒலிவாங்கியே மயங்கும் வண்ணம் அழுத்திச் சொல்லவே ஆசைபடுகின்றேன்! திறனாய்வு செய்வோருக்காகவே பாரதி எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன

«ஊருக்கு நல்லது சொல்வேன் – எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன் …»

என்னும் எண்ணத்தோடு மூன்று நாள் நிகழ்வுகளையும் அலசிப்பார்த்திட ஆசை எழுகின்றதே…!
என் ஆசைக்கு சிறு தடையாக இருப்பது நிகழ்ச்சி நிரலே தான். யார் கைகளில்..அல்லது கண்களில் தட்டுப்பட்டால் அதை தயவு செய்து என்னிடமே சேர்த்துவிடுங்கள்! சேர்த்து விடுவீர்கள் தானே? இந்த ஆண்டின் ஆய்வுக்கு மட்டுமல்ல எதிர்வரும் ஆண்டிலும் அது பயன்படலாம்!!!

இசை பயிலும் மாணாக்கர்களே அதிகமான பாடல்களைக் கேளுங்கள்! நடனம் பயிலும் மாணாக்கர்களே…
புதிது புதிதாக நடனங்களைப் பாருங்கள்! ஆனால் ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள் இறுவட்டுக்களில் கேட்டதையும்…
இணையத்தளங்களில் பார்த்ததையும் முறையாக ஆசிரியர்களின் நெறிப்படுத்தல் இன்றி மேடை ஏற்றி நீங்களும் சங்கடப்பட்டு
என்னைப்போன்ற அப்பாவிக் கலைவிரும்பிகளையும் மருத்துவர்களை நாடிச் செல்ல வைத்துவிடாதீர்கள்!!!

எது எப்படியோ சலங்கை நர்த்தனாலயத்தின் பெற்றோருக்கும் அதன் இயக்குனர் திருமதி .மேர்சி சூசை அவர்களுக்கும்…சக கலைஞர்களுக்கும் இரண்டாவது நாள் நிகழ்வினில் நடனக் கலைஞர்கள் சார்பிலே இடம்பிடித்த கலா சாதனா கலைக்கூடத்திற்கும் மூன்று தினங்கள் ஒலி , ஒளி அமைப்பினைச் சிரத்தையுடனும்…மிகுந்த பொறுமையுடனும்…
செய்த திருவாளர் .திரு அவர்களையும் கலாரசிகர்கள் சார்பிலே..நன்றி பாராட்டாமல் இருக்கவே முடியாது ..!

அது சரி ஏதோ , இராஜதந்திரியாகவும் , முரண்பாடுகளே இல்லாதவராகவும் , சாதனையாளராகவும் ஒருவரைப்..
பாராட்டினார்களே அதைப்பற்றி அன்பான மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்?????

செவிகளில் ஏதும் கேட்டால் என்னிடமும் சொல்லிவிடுங்கள் அதுவும் எனது திறனாய்வுக்கு உதவிடலாம்!
ஒருவேளை நல்லிசை நாட்டியவேள்வியின் நிகழ்ச்சி நிரல் மண்டப ஒழுங்குகளில் படப்பதிவுகளில் முனைப்பாக இருந்த
சஞ்சயனிடம் இருக்குமோ?தயவு செய்து இருந்தால் நிழற்படத்துடன் அதையும் மறக்காமல் தந்துவிடுங்கள்…சஞ்சயன்…!
எங்கள் முத்துமாரியம்மா உங்களையும் நிச்சயமாய் காப்பாற்றுவாள்…..!!!

விடுதலை பெறாத மக்களுக்கு மத்தியிலே ஆடுவோமே…பள்ளு…பாடுவோமே.. என்று இந்தியாவில் இருந்து வந்தவர்கள் மகிழ்ச்சியாக ஆடியது சரிதானா?

எங்களின் துன்பமும் துயரமும் அவர்கள் இதுவரை அறியவில்லையா? சபையில் எழுந்த கேள்வி இது!
பதில் அறிந்தால் மறைக்காமல் பதிவு செய்திடுங்கள்!

இளைய தளபதியின் கத்தி பார்த்துவிட்டீர்களா….?

Leave a Comment

 

Scroll to top