«நோர்வே தமிழ்3 வானொலியின் 2வது ஆண்டு விழா: இளைய ஆளுமையாளர்கள் மதிப்பளிக்கப்பட்டனர் Reviewed by Momizat on . தமிழ்3 நோர்வே தமிழர் வானொலியின் 2வது ஆண்டு நிறைவையொட்டிய "சங்கமம்" நிகழ்வு நேற்று (01.03.15) ஒஸ்லோவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் "தமிழ்3 இன் தமிழர் மூவர்-2015": தமிழ்3 நோர்வே தமிழர் வானொலியின் 2வது ஆண்டு நிறைவையொட்டிய "சங்கமம்" நிகழ்வு நேற்று (01.03.15) ஒஸ்லோவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் "தமிழ்3 இன் தமிழர் மூவர்-2015": Rating: 0
You Are Here: Home » Front page » «நோர்வே தமிழ்3 வானொலியின் 2வது ஆண்டு விழா: இளைய ஆளுமையாளர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்

«நோர்வே தமிழ்3 வானொலியின் 2வது ஆண்டு விழா: இளைய ஆளுமையாளர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்

Ravinea_awardதமிழ்3 நோர்வே தமிழர் வானொலியின் 2வது ஆண்டு நிறைவையொட்டிய «சங்கமம்» நிகழ்வு நேற்று (01.03.15) ஒஸ்லோவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் «தமிழ்3 இன் தமிழர் மூவர்-2015″: எனும் நிறப்பு விருது மூலம்; இளைய தலைமுறையைச் நேர்ந்த துறைசார் ஆளுமையாளர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

Pirabhaஇந்நிகழ்வில் பங்கேற்பதற்காக அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் தாயகத்திலிருந்து வருகைதந்திருந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுடன் தாயக மற்றும் புலம்பெயர் வாழ்வியல் குறித்த விவாதங்களும் கருத்துப்பகிர்வுகளும் இடம்பெற்றன. Engel Paradis விழா மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர்.
Discussion_nilaமருத்துவத்துறையில் PhD-கலாநிதி ஆய்வுக்கற்கையினை முன்னெடுத்து வரும் ரவீனா மனோதீபன், «Nano Technique» துறையில் முதுநிலைக் கல்வியினை நிறைவுசெய்து (System developer) பொறியியலாளராக பணிபுரிந்து, தற்போது விமான ஓட்டியாகவும் ஆகியிருக்கும் பிரபா குகதாசன் மற்றும் மாற்றுத் திறன் கொண்டுள்ளபோதும் அதை ஒரு பொருட்டாக கொள்ளாத மனப்பாங்குடன் சட்டத்துறையில் கல்விபயின்று, சிறப்புத்தகமையுடன் சித்தியடைந்து சட்ட ஆலோசகராக பணியேற்றிருக்கும் தக்ஷா சிறிராகுலன் ஆகிய மூவரும் தமிழ்3 இன் தமிழர் மூவராகத் தெரிவு செய்யப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்தனர். இம்மதிப்பளிப்புச் செயற்பாடு மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

dance2தமிழ் 3 வானொலியானது, நோர்வேஜிய தமிழச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் ஆளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகவும் உந்துதலாகவும் கொள்ளக்கூடிய மூவரைத் தேர்ந்தெடுத்து மதிப்பளிப்பதாக ஏலவே அறிவித்திருந்தது.
இந்த ஆண்டிற்கான «நோர்வேஜிய தமிழ்» முன்மாதிரி ஆளுமையாகத் தெரிவுசெய்வதற்கு நிபந்தனைகளை வெளியிட்டு அவ்வாறான ஆளுமையாளர்களைப் பரிந்துரைக்குமாறு அறிவிக்கப்பட்டதற்கு அமைய, கடும் முயற்சியின் விளைவாக தத்தமது துறைகளில் தடம்பதித்த, சமூக ஈடுபாடு கொண்ட இளைய தலைமுறையைச் சேர்ந்த திறமையாளர்கள் பலர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

Mellisaiகல்வியாளரும் ஆய்வாளருமான பகீரதன் சிவலிங்கம் தலைமையில், கவிஞரும் நடன ஆசிரியருமான கவிதா, நோர்வே தமிழ் கற்கை மையத்தின் இணைப்பாளர் ஜோகராஜா பாலசிங்கம், ஊடகவியலாளர் ராஜன் செல்லையா, மற்றும் ஊடகவியலாளர் ரூபன் சிவராஜா ஆகிய ஐவர்; அடங்கிய நடுவர்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட ஆளுமைகளிலிருந்து மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தெரிவு செய்யப்பட்ட மூவரும் 01.03.2015 நடைபெற்ற தமிழ் 3 வானொலியின் 2வது ஆண்டு விழாவில் மதிப்பளிக்களிக்கப்பட்டனர்.

dance2013ஆம் ஆண்டு தமிழர் திருநாள்-பொங்கல் அன்று காற்றலைப் பயணத்தைத் தொடங்கிய தமிழ்3, இரண்டாவது ஆண்டினை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில்; தொடர்கின்றது.
மாலை உணவுடன், மெல்லிசையில் பாரதி, பாரதிதாசன் பாடல்கள், திரையிசை, நகைச்சுவை அரங்கம், நடனங்கள் உரையாடல்கள், கருத்துப்பகிர்வுகள், விவாதங்கள் உள்ளடங்கலான நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன.

Discussion1அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் தாயகத்திலிருந்து வருகைதந்திருந்து இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார். “ஜனாதிபதித் தேர்தலின் பின்! அடுத்தது என்ன?” எனும் தலைப்பில் நிலாந்தன், பேராசிரியர் ந. சண்முகரட்ணடம் மற்றம் கலாநிதி சர்வே தர்மா ஆகியோர் பங்குபற்றிய கருத்துக்களம் நிகழ்ச்சியில், சமகால அரசியல் நிலைமைகள் பற்றியும் தமிழர் அரசியலின் எதிர்கால செல்நெறி எவ்வாறு அமையவது சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றிய காத்திரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

Dakshaசமூக வலைத்தளங்களும் இளையோரும் – இது பெற்றோர், பிள்ளைகளுக்கிடையிலான இடைவெளியை அதிகரிக்கின்றதா» என்ற தலைப்பிலமைந்த விவாதக்களமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நோர்வேயிய உளவியலதுறை ஆய்வுநிபுணர் Britt Oppedahl மற்றும் தமிழ் கருத்தாளர்கள் விவாதக் களத்தில் பங்கேற்றிருந்தனர்.

Audienceகூடிப்பேசவும், மகிழ்வுறவும் சிந்திக்கவுமான ஒரு ஒன்றுகூடலாக நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுடிருந்தன. நோர்வேயில் வாழும் ஈழத்தமிழ் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளோடு புலம்பெயர்வாழ்வியல் மற்றம் தாயக நிலைமைகள் சார்ந்த பயனுள்ள விடயங்களைப்பற்றி கலந்து பேசுகின்ற வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

 

Scroll to top