நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு ஓஸ்லோ நடனக்கலைஞர்களிடம் இருந்து… Reviewed by Momizat on . நோர்வே தமிழ்ச்சங்கத்தால் நடாத்தப்பட்ட வருடப்பிறப்புக் கலைநிகழ்வின்போது நிகழ்த்தப்பட்ட தலைவரது நாகரிகமற்ற உரையின் காரணமாக, நடன ஆசியர்களால் இது எழுதப்படுகிறது. இந நோர்வே தமிழ்ச்சங்கத்தால் நடாத்தப்பட்ட வருடப்பிறப்புக் கலைநிகழ்வின்போது நிகழ்த்தப்பட்ட தலைவரது நாகரிகமற்ற உரையின் காரணமாக, நடன ஆசியர்களால் இது எழுதப்படுகிறது. இந Rating: 0
You Are Here: Home » Front page » நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு ஓஸ்லோ நடனக்கலைஞர்களிடம் இருந்து…

நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு ஓஸ்லோ நடனக்கலைஞர்களிடம் இருந்து…

Shahul Kollengode (1)
நோர்வே தமிழ்ச்சங்கத்தால் நடாத்தப்பட்ட வருடப்பிறப்புக் கலைநிகழ்வின்போது நிகழ்த்தப்பட்ட தலைவரது நாகரிகமற்ற உரையின் காரணமாக, நடன ஆசியர்களால் இது எழுதப்படுகிறது.

இந்த வருடத்தில் இருந்து நடனக்கலைக்கூடங்கள் அனைத்தும், தமது கலைப்படைப்புகளுக்காக சமூகநிறுவனங்களிடம் இருந்து அவர்களுடைய பங்களிப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவை ஏகமனதாக எடுத்துக்கொண்டது.

விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் இங்கே கருத்தில் கொள்ளப்படும்.

இந்த முடிவின் பின்னணி
நடனக்கலைஞர்களான எங்களுடைய படைப்புகளை மேலும் வளர்க்கும் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்களின் பளுவைக் கொஞ்சமேனும் குறைக்கும் முயற்சியே இது.

எந்தப் படைப்பாளியானாலும் தகுதியானவர்களை இனம் கண்டு கலைஞர்கள் இந்த கலைகளை வளர்ப்பதற்குரிய பங்களிப்பை தமிழ் அமைப்புகளும் கொடுக்க வேண்டும் என்பது எமது கருத்து. பரதமானது பழமையான, உன்னதமான கலை என்பதால் அதற்கு எந்தத் தேவையும் இல்லையா? இக்கலைக்கு சமூக வளர்ச்சிக்காக இயங்கும் நிறுவனங்கள் பங்களிக்கக்கூடாதா?

எந்த ஒரு கலைக்கும் அதற்குரிய பெறுமதியை எமது சமூகம் அளிக்கத் தவறினால், அந்தக் கலையை ஒரு கட்டத்திற்கு அப்பால் நம்மால் நகர்த்திச்செல்ல முடியாது என்பதே யதார்த்தம். இந்த யதார்த்தத்தை உணர்ந்து மாணவர்களை ஊக்குவிக்க நிறுவனங்களும் அதன் நிர்வாகங்களும்கூட செயல்படவேண்டும்.

தமிழ்சங்கத்தின் உரை பற்றி
”போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய கலையை நடன ஆசிரியர்கள் விற்கின்றார்கள், விலைபேசுகிறார்கள் என்ற முறையிலும். தமிழ்சங்க நிதிப்பொறுப்பாளர் பணத்தினை என்வலப்பில்(கடித உறையில்) போட்டு வெளியே தயாராக வைத்துள்ளார், நீங்கள் தாராளமாக வாங்கிச்செல்லலாம்.” என்று கேலி நிறைந்த தொனியில் பேசப்பட்ட உரையுடன் விழா ஆரம்பமானது. இருந்தும், அத்தனை நடனக்கலைஞர்களும் தாம் எடுத்துக் கொண்ட பணிக்காக நடனநிகழ்வை சிறப்பாகவே மேடையேற்றினர் என்பதும், அதன் பிறகே தமது கருத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர் என்பதும் குறிபிடத்தக்கது.

உண்மையில் கலையை விற்பது என்றால் என்ன? அது பணம் பெறுவது சம்பந்தப்பட்டதா அல்லது கலைஞனின் விழுமியம் சம்பந்தப்பட்டதா?

இனி..
ஒரு வளர்ந்த சமூகத்தில்தான் கலைகளுக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொள்ளக்கூடிய சமூகமும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும். பழமை, உன்னதம் என்ற கலை என்பதால் அதற்குரிய வளர்ச்சி இருக்கக்கூடாதா என்ற கேள்வி தமிழ்சங்கத்தின் உரையின் பின் எழுகிறது? கலைஞர்களின் புதிய சிந்தனைகளையும், புதிய படைப்புகளையும் வளர்த்துவிடுவது எமது புலம்பெயர் தேசத்து அமைப்புகளின் நோக்கமாக இருக்கட்டும்.

தமிழ்சங்கத்தினது சந்தேகங்களையோ கருத்துக்களையோ எம்மோடு கலந்துரையாடாமல், அரங்கத்தில் நடன ஆசிரியர்களை அவமதித்ததையிட்டு எமது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்விடயம் பற்றிய ஒரு வெளிப்படையான உரையாடலை நோர்வே தமிழ்ச்சங்கம் தனது சமூகப் பிரக்ஞையோடு ஏற்படுத்தும் என எதிர்பார்கின்றோம்.

இங்ஙணம்
ஓஸ்லோ நடனக்கலை ஆசிரியர்கள்
(மைதிலி இரவீந்திரா, மாலதி யோகேந்திரன், துஸ்யா அமரசிங்கம்,
கல்யாணி தயாபரன், தமிழினி தீபகாந்த், மேரி இளங்கீரன், கவிதா இரவிக்குமார்)
24.04.2015 – ஒஸ்லோ

Comments (1)

Leave a Comment

 

Scroll to top