நாஜிக்களின் கலைப் பொக்கிஷங்கள் கண்டெடுப்பு Reviewed by Momizat on . நாஜிக்களால் பறிமுதல் செய்யப்பட்ட 590 ஓவியங்களின் விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. ஜேர்மனியின் மூனிச் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து 590 ஓ நாஜிக்களால் பறிமுதல் செய்யப்பட்ட 590 ஓவியங்களின் விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. ஜேர்மனியின் மூனிச் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து 590 ஓ Rating: 0
You Are Here: Home » செய்திகள் » உலகச் செய்திகள் » நாஜிக்களின் கலைப் பொக்கிஷங்கள் கண்டெடுப்பு

நாஜிக்களின் கலைப் பொக்கிஷங்கள் கண்டெடுப்பு

nazizt bildetநாஜிக்களால் பறிமுதல் செய்யப்பட்ட 590 ஓவியங்களின் விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

ஜேர்மனியின் மூனிச் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து 590 ஓவியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதில் 25 ஓவியங்கள் குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகின.

இந்நிலையில் மீதமுள்ள ஓவியங்கள் குறித்த பெயர்களையும், அவற்றின் தகவல்களையும் அடுத்தவாரம் வெளியிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் அதன் உண்மையான மூலத் தோற்றத்தையும், தன்மையையும் அறியலாம்.

இச்சம்பவத்தை தொடர்ந்து நாஜி கலைப்பொருள் வணிகரின் வீட்டிலிருந்து 1400 கலைப் படைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அவர் கூறுகையில், இக்கலைப் பொருட்களுக்கு மதிப்பையும், மரியாதையையும் கொடுக்க வேண்டியது நம் கடமையாகும்.

நாஜிக்களால் ஜேர்மனியில் யூதர்களிடமிருந்தும், இஸ்ரேல் மக்களிடமிருந்தும் பெறப்பட்ட கலைப் பொக்கிஷங்கள் இவையாகும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஸ்பேக் என்ற நீதித்துறை அமைச்சர், நாஜிக்கள் பறிமுதல் செய்த குற்றத்திற்காக ஜேர்மனி இதற்கான பொறுப்பை ஏற்று ஓவியங்களின் மூலாதாரத்தை ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை பல்வேறு யூத குழுக்களும், கலைப் பயிலகங்களும், அமெரிக்க அரசாங்கமும் வரவேற்கின்றன.

 

– newsonews.com

Leave a Comment

 

Scroll to top