நாகூர் ஹனிபா மௌத்ஆனார் – சிவபாலன் Reviewed by Momizat on . நேரம் இரவு 12ஐ நெருங்கிவிட்டது. கொழும்பு சமிட் ப்லேஸில் உள்ள நண்பர் /இளவல் அமைச்சர் அஷ்ரப்பின் உத்தியோகபூர்வ இல்லம்.சட்டக் கல்லூரியில் எனக்கு இரண்டு வருடங்கள் ப நேரம் இரவு 12ஐ நெருங்கிவிட்டது. கொழும்பு சமிட் ப்லேஸில் உள்ள நண்பர் /இளவல் அமைச்சர் அஷ்ரப்பின் உத்தியோகபூர்வ இல்லம்.சட்டக் கல்லூரியில் எனக்கு இரண்டு வருடங்கள் ப Rating: 0
You Are Here: Home » Front page » நாகூர் ஹனிபா மௌத்ஆனார் – சிவபாலன்

நாகூர் ஹனிபா மௌத்ஆனார் – சிவபாலன்

Nahoor Haneefaநேரம் இரவு 12ஐ நெருங்கிவிட்டது. கொழும்பு சமிட் ப்லேஸில் உள்ள நண்பர் /இளவல் அமைச்சர் அஷ்ரப்பின் உத்தியோகபூர்வ இல்லம்.சட்டக் கல்லூரியில் எனக்கு இரண்டு வருடங்கள் பின்னர் நுழைந்தவர். மரக்கறி சாப்பாட்டை கையிலேந்தி வந்து அண்ணன் நான் உங்களோடு இருந்து சாப்பிடுவோம் என அமர்ந்தார்.  இடதுபுறம் நான் வலதுபுறம் முன்னாள் அமைச்சர் இராஜதுரை. இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்   கம்பவாருதி இ .ஜெயராஜை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க அழைத்து வந்தார்.

அன்று மாலை பண்டாரநாயகா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் அஷ்ரப்பின் கவிதை தொகுப்பின் பிரமாதமான வெளியீட்டு விழா. பிரதான மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் மீன் பாடும் தேன் நாடாம் மட்டுநகர், கோவிலும் சுணையும் கடலுடன் சூழ்ந்த கோணமலை, மலைநாடு,கொழும்பு என ஆயிரக்கணக்கானோர். மண்டப வாயிலில் இருந்து நாதஸ்வர மேதை பத்மநாதனின் வாத்தியத்தில்   கிழியனூர் கவி ஆர்.அப்துல் சலாம் யாத்து நாகூர் ஹனிபா பாடி  மத இன வேறுபாடின்றி  இலட்சக்கணக்கானோர் இரசித்த பாடல், ‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லைஎன்று சொல்லுவதில்லை ..’    ஒலிக்க பேழை ஒன்றில் வைத்து எடுத்து வரப்பட்ட நூலை அஸ்ரப்  தாயிடம் கொடுத்து வெளியிட்டார். அந்த நிகழ்வின் பிரமாண்டம் ஏதோ பிழை நடக்கப்போகிறது என்ற சலனத்தை என்னுள் எழுப்பியது. இரண்டு வாரங்களின் பின் அஷ்ரப் வானூர்தி விபத்தில் மறைந்தார்.

 தொண்ணூறு வயதில் நேற்று புதன்கிழமை (8.04.15) மாலை நாகூர் ஹனிபா மௌத் ஆனார் . என்றும் எவரும் எப்பொழுதும் கேட்டு பொருளுணர்ந்து அனுபவிக்கக்கூடிய பாடல் அது. மேலும் பல நல்ல பாடல்களை பாடிய சிறந்த கலைஞர் இது கலைஞர்களுக்கு போதாதகாலம்போலும். கமலினி,நாகூர் ஹனிபா, இன்று அந்த பல்கலைவல்லாளர் ஜெயகாந்தனின் மறைவு.சில நேரங்களில் சில மனிதர்களைப்போலவே விதியும் சதி செய்துவிடுகிறது. அக்கினிப் பிரவேசங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எனின்  வாழ்க்கை  எனும் நீரோட்டம் ஒடிக்கொண்டேதான் இருக்கும்.!
திருமலை கா.சிவபாலன்.

Leave a Comment

 

Scroll to top