கமலினி செல்வராஜன் காலமானார் – கா.சிவபாலன் Reviewed by Momizat on . கமலினி எனும் கலைஞர் எம்மை விட்டு இன்று செவ்வாய்க் கிழமை (07.04.2015) இல் மறைந்து விட்டாலும் அவர் ஈழத்து கலை, இலக்கிய உலகுக்கு அழித்த பங்களிப்பு மறக்கமுடியாத ஒன் கமலினி எனும் கலைஞர் எம்மை விட்டு இன்று செவ்வாய்க் கிழமை (07.04.2015) இல் மறைந்து விட்டாலும் அவர் ஈழத்து கலை, இலக்கிய உலகுக்கு அழித்த பங்களிப்பு மறக்கமுடியாத ஒன் Rating: 0
You Are Here: Home » Front page » கமலினி செல்வராஜன் காலமானார் – கா.சிவபாலன்

கமலினி செல்வராஜன் காலமானார் – கா.சிவபாலன்

kamaliniகமலினி எனும் கலைஞர் எம்மை விட்டு இன்று செவ்வாய்க் கிழமை (07.04.2015) இல் மறைந்து விட்டாலும் அவர் ஈழத்து கலை, இலக்கிய உலகுக்கு அழித்த பங்களிப்பு மறக்கமுடியாத ஒன்று. சிலரின்பெய ர்/ புகழ் அவர்களின்  தந்தையாரினதோ,கணவணதோ அல்லது மனைவியனதோ புகழில் தங்கியிருக்கும். ஆனால்  கமலினியின் தந்தையார் தென் புலோலியூர் கணபதிப்பிள்ளை அவர்கள், துணைவர் அவர் விரும்பி வரித்துக்கொண்ட பல்கலைவேந்தர், சில்லையூர் எனும் சிற்றூரை தன் பெயரால் பெருமைப்படுத்திய செல்வராஜன். எனினும் கமலினி ஒரு வானொலி, தொலைக்காட்சி  அறிவிப்பாளராக,தயாரிப்பாளராக, பி..பி .சி  தமிழோசை செய்தியாளராக, நாடக, சினிமா நடிகையாக,பாடகியாக, கவிஞராக, இனிமையான  குரலும், அழகான முகமும் கொண்டு தற்றுணிபில் பெருமையோடு வலம் வந்த ஒரு கலைஞர் எனின் அது மிகையாகாது.

கமலினியும் சில்லையூராரும் நான் கேட்டவுடன் எனது குறும்திரைப்படமான ‘இனி எனினும்’ இல் தோன்றியதுமட்டுமல்லாமல் சில்லையூராரிடம் நான் படத்தின் கருவை  கூறி பிலிம் ஸ்க்ரிப்ட்டை எழுதி உதவும்படி கேட்டபோது அது உன்னால் முடியும் தம்பி என என்னை ஊக்குவித்தவர். கமலினி எனது  பாரதியின்  வரலாறு கூறும்  ‘பாட்டுக்கொரு புலவன்’ விபரண நாடகத்தில்  கதைகூறுபவராக கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் மட்டுமல்லாமல் கொழும்பில் தனக்கு இருந்த  எத்தனையோ நிகழ்ச்சிகழுக்கு நடுவிழும் திருகோணமலை அரங்கேற்றத்த்திலும்கூட இந்து இளைஞர் பேரவையின் நிதி சேகரிப்புக்காக பங்குபற்றியதை மறக்கமுடியாது. திருகோனமலையின் புகழ்பூத்த ஊடகவியலாளர் சின்னையா  குருநாதனின் பாராட்டு விழாவினை அறிவிப்பாளராக இருந்து நடாத்தித் தரும்படி நான் கேட்டபோதும் தட்டாமல் திருமலைக்கு வந்து அதனைச் செய்தார்.அது அவரின் பரந்த மனப்பாங்கையே காட்டியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பேராசிரியர் மௌனகுரு,கிழக்கு பல்கலைக்கழக கூத்து கலையில் தேர்ச்சி பெற்ற இருவருடன் ஒஸ்லோவுக்கு சங்கீத ஆசிரியை  வாசுகியின் அழைப்பின் பேரில்  வந்திருந்தபோது ஈழத்து நாடகம், வடமோடி,தென்மோடி கூத்து பற்றிய கமலினியின்  தமிழிலமைந்த சிறப்பான  பேச்சினை ஆங்கிலத்தில் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் அமைந்த ஒரு நிகழ்வில் எதேச்சையாக மொழியாக்கம் செய்யக்கிடைத்ததை மீட்டுப்பார்க்கிறேன்.
அவரை   இழந்து தவிக்கும் அவரின் ஒரே மகன் அதிசயனுக்கும் அவரின் மற்றும் குடும்ப அங்கத்தவர்கழுக்கும், ஈழத்திலும் உலகடங்கிழும் வாழும் அவர்தம் இரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபம் உரித்தாகட்டும்.
திருமலை கா.சிவபாலன்

Leave a Comment

 

Scroll to top