ஒரு சுய அனுபவப் பார்வை – பத்மநாதன் Reviewed by Momizat on .  கடந்த 2016 தை இரண்டாம் திகதி எனது பாடசாலையின் ஆண்டு விழா நடாத்தி இருந்தேன்.. அதில் ஏற்பட்ட அனுபவங்களையும் கேள்விகளையும் மனதில் கொண்டு இதை எழுதுகிறேன். இது சுய  கடந்த 2016 தை இரண்டாம் திகதி எனது பாடசாலையின் ஆண்டு விழா நடாத்தி இருந்தேன்.. அதில் ஏற்பட்ட அனுபவங்களையும் கேள்விகளையும் மனதில் கொண்டு இதை எழுதுகிறேன். இது சுய Rating: 0
You Are Here: Home » Front page » ஒரு சுய அனுபவப் பார்வை – பத்மநாதன்

ஒரு சுய அனுபவப் பார்வை – பத்மநாதன்

 கடந்த 2016 தை இரண்டாம் திகதி எனது பாடசாலையின் ஆண்டு விழா நடாத்தி இருந்தேன்.. அதில் ஏற்பட்ட அனுபவங்களையும் கேள்விகளையும் மனதில் கொண்டு இதை எழுதுகிறேன்.
இது சுய தம்பட்டமோ இ அல்லது மற்றவர்களை குறை கூறுவதோ அல்ல.எனது ஆதங்கத்தை எழுதுகிறேன் .எனது பாடசாலை விழா நடந்த பொழுதும் நடந்து முடியவும் மக்கள் முகத்தில் இருந்த சந்தோசமும் மனநிறைவும் மிக மகிழ்ச்சியைக் கொடுத்தது.. அவர்களிடமிருந்து வந்த நேரடிப் பாராட்டுக்கள்இ தொலைபேசிப் பாராட்டுக்கள் இ மற்றும் குறும் செய்திப் பாராட்டுகள் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
நிகழ்ச்சி நடந்து முடிய இன்றைய நாளும் இனிதே என்று எழுதும் நண்பன் சஞ்சயன் உட்பட ஒருவருமே ஓரிடமும் எழுத்து மூலமான கருத்துத் தெரிவிக்கவில்லை ..

அடுத்தநாள் ஒரு குறும் செய்தி வந்தது டாக்டர் நண்பன் லிமலநாதனிடமிருது .. எனது விழா பற்றி தான் முகப்புத்தக்த்தில் எழுதியுள்ளதாக.. அதைக் கீழே இதன் முடிவில் பிற்சேர்க்கையில் வாசியுங்கள்.

மீரா, தீபா குழுவினருடன் பிரவீனாஇஅட்ஷயன், அஸ்மிர்த்தன், நிதர்சன், அஞ்சலி, ஷர்மஜா இன் நிகழ்ச்சி எதிர்பார்த்த எல்லோருக்கும் மன மகிழ்வைக் கொடுத்தது ..மேடை அளவு நடனத்துக்கேற்ற ஒலியமைப்புக்கேற்ற வகையில் இருந்திருந்தால் இன்னும் சிறந்திருக்கும் .. அவர்களின் கடின உழைப்புக்கு பாராட்டுக்கள்.

மற்றும் எல்லோரது நடனங்கள், பாடல்கள், . கிட்டார்இ றம் வாசித்தவர்கள் 12 ம் வகுப்பு மாணவர்களின் குழு நடனம் எல்லாம் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகத்தான் இருந்தன ..பார்வையாளர்களின் கரகோஷம் பெற்றதும்இமக்களின் ஆரவாரமும் அதற்குச் சான்று பகரும்..

ஆனால் எனக்கு மகிழ்ச்சி இருந்தாலும் எனக்கு உண்மையில் நிகழ்ச்சி போதியளவு திருப்பியளிக்கவில்லை. எனது நாடகத்துக்கு 35 புள்ளிகள் தான் என்னால் வழங்க முடிகிறது. நடிகர்களுக்கு 75 புள்ளிகள் வரை வழங்கினாலும்… நான் திட்டமிட்ட படியே நாடகத்தில் அழகியல் வரவில்லை… அசைவுகள் எல்லாம் ஒழுங்கு படுத்தத முடியவில்லை .. அரங்கமைப்பு செய்யவே இல்லை.. இன்னும் பலகுறைகள்.. நானும் நாடகத்தில் இறுதியில் மேடையேற வந்து விட்டது. இறுதி நேரத்தில் மற்ற வேலைகள் கூடிவிட்டதாலும் எதிர் பார்த்த நடிகர்கள் வராத படியால்.. அந்தப் பாத்திரமும் பாடி ஆடிய படியால் சிறக்கவில்லை.. இன்னொருவர் பாடவோ பிற்பாட்டு இருந்திருந்தால் சிறந்திருக்கும்.
ஆனால் நாடகத்துக்கு பிள்ளைகள் சுயமாக நேரடியாகப் பேசி நேரடி இசையில் பாடி இசையமைத்தது மிக மகிழ்ச்சியே.. அந்தளவில் நாடகம் ஒப்பீட்டு ரீதியில் வெற்றியே .. இம்முறை பிள்ளைகளுக்கு நாடகம் சொல்லிக்கொடுப்பது எப்படி என்று படித்து விட்டேன். மிக இலகுவானது எனபதை இறுதியில் தான் படித்தேன் அடுத்த முறை சிறப்பாக செய்யலாம் என்று நம்புகிறேன்.

ஆனால் நாடகத்தில் சொல்ல முயன்ற விடயங்கள் யாவும் மக்களைப் போய்ச் சேர்ந்ததை அவர்களின் சிரிப்பும் கரவொலியும் காட்டின.

விழாவுக்கு தவிர்க்க முடியாமல் வரமுடியாமல் போன நண்பரிடம் தொலை பேசி எனது இயல்பான ஆதங்கத்தைத் தெரிவித்துக் கேட்டேன்.. ஏன் ஒருவரும் எழுத்துமூலம் கருத்துத் தெரிவிக்கவில்லை என்றும்.. துப்பாக்கிகளைச் சிலர் மௌனமாக்கியது போல் கைவிரல்களையும் பேனாக்களையும் மௌனமாக்கி விட்டார்களா என்றேன்.

அதற்கு அவர் சொன்னார் தனக்கு நன்றாகத் தான் சொல்லி இருக்கிறார்கள்.. நேரம் வரும் பொழுது பாராட்டுவார்கள் என்று…
ஒரு நண்பர் சொன்னார் பலரும் வாயடைத்துப் போய்விட்டார்கள் அது தான் காரணமாக இருக்கலாம் என்றார் ..
பின்பு 3ம் நாள் வீடியோ வெளிவந்தபின் சிலர் பாராட்டினார்கள்….
சில கேள்விகள் .

என்னால் தனி மனிதனால் ஒரு சில பெற்றோரின் சிறிய உதவியுடன் ஒரு மன நிறைவான நிகழ்ச்சியைக் கொடுக்கும் பொழுது… காலம் காலமாக இயங்கி வரும் சங்கங்களால் ஏன் இப்படி ஒரு மனநிறைவான நிகழ்ச்சியைத் தர முடிவதில்லை. இதில் சாப்பாட்டுப் பொறுப்பை எடுத்தவர்களும் விழாவின் வெற்றிக்குக் காரணமானார்கள். நன்றிகள்.

பல நிகழ்ச்சிகளுக்கு விமர்சனம் எழுதுவார்கள் இசை நிகழ்ச்சி நன்றாக இருந்தது ஆனால் ளழரனெ ளலளவநஅ சரியில்லை பாட்டுக்கள் விளங்கவில்லை என்பார்கள்.. அதே போல் ஒளியமைப்பிலும்இ நடனம் நன்றாக இருந்தது முகம் தெரியவில்லை என்பார்கள்.. ஆனால் எனது நிகழ்ச்சியில் ஒளியமைப்பு, ஒலிஅமைப்பு ஒப்பீட்டு ரீதியில் மிகச் சிறப்பாகவே இருந்தது.இன்னும் முன்னேற வேண்டும் என்பது அடுத்த கதை..

நான் இந்தியாக் கலைஞர்களை வெறுக்கவில்லை அவர்களிடம் இருந்து நாங்கள் படிக்க பலநல்ல விடயங்கள் இருக்கும் என்பதையோ மறுக்கவில்லை..
ஆனால் இந்தியக் கலைஞர்களுக்கு பல ஆயிரங்கள் இலட்சங்கள் செலவழித்துக் கூப்பிட்டும் ஒரு மனநிறைவான நிகழ்ச்சியைத் தருவதில்லை.. அவர்களுக்கு ஊர்சுத்திக்காட்ட ஒரு குழு அப்படியாக பல ஆட்டங்கள் நடக்கும்.

ஆனால் நம்ம இளம் கலைஞர்களை ஒரு மனநிறைவைத் தரக்கூடிய கலைஞர்களை வளத்து விடுகிறோம் என்று சொல்லி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது மோசமல்லவா?

அண்மையில் கூட ஒரு தமிழ்ச்சங்க நிர்வாக உறுப்பினர், என்னுடைய மாணவன் , தொழில் ரீதியாக கலையில் ஈடுபடுபவன். அவனுக்கு எவ்வளவு பணம் கொடுத்தது என்றார்..

அதற்கு நான் உண்மை தொகையைச் சென்னேன் அதற்கு அவர் சொன்னார் நீங்கள் தனிப்பட்ட ஆட்கள் கொடுக்கலாம் ஆனால் அது மக்களுக்காக இயங்குகிற அமைப்பு, ஆன படியால் இலவசமாகவோஇ குறைந்த பணத்திற்குச் செய்ய வேண்டும் என்றார்..

இவர்களால் இந்தியக் கலைஞர்களுக்கு பெரும் பணம் குடுப்பதுடன் பல சேவைகளும் செய்கிறார்கள் ..அதில் ஒருசிறிய பகுதியை ஆயினும் நமது பிள்ளைகளுக்குக் கொடுத்தால் என்ன. அவர்கள் என்ன இலவசமாகவா படித்தார்கள்.
மிகவும் குறைந்தளவு பணம் மாணவர்களிடம் வேண்டி இ எந்த உதவித்தொகையும் பெறாமல் பாடசாலை நடாத்தும் என்னால் கொடுக்கமுடியும் என்றால் ஏன் உதவிப்பணம் பெற்று இ அங்கத்துவப்பணம் பெற்று இ நுழைவுச் சீட்டும் விற்று நிகழ்ச்சி நடாத்துவோரால் கொடுக்க முடிவதில்லை..

வளர்த்து விடுகிறோம் என்று சொல்லி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதை மனிதாபிமானம் உள்ளோர் எல்லோரும் கண்டிக்க வேண்டும்.
அறிவிப்பாளர் சிலவேளையில் சொல்லுவார்கள், நேற்றுப் சிறியவனாக பார்த்த மாதிரி இருக்கு இன்று சிறப்பாக வாசிக்கிறான் ..வளர்ந்து வருகிறான் என்பார் இஇ தான் ஏதோ ஒலிவாங்கியுடன் பிறந்து நேரடியாக மேடைக்கு வந்த மாதிரி.. அந்த இளைஞர் எப்படியாக சிறப்பாக் வாசித்திருந்தாலும் வளர்ந்து வரும் கலைஞர்கள் என்று சொல்வதே பணம் கொடுக்காமல் விடுவதற்கு..

பணத்துக்குக் கலையை விற்பதா என்ற கேள்வி வேண்டாம் .. கலைஞர்களுக்கு பெறுமதி இல்லை. கார்மேகம் நந்தா கூறுவது போல் பொற்கிளி கொடுக்கமுடியாது ஆனால் போதிய பாராட்டும் சிறிதளவாயினும் பணமும் கொடுக்கலாம் அல்லவா. குட்டி மாஸ்ரர் சொன்னார் ஒரு அரங்கேற்றத்தில், பிள்ளைகள் பாடும் பொழுது சிறிதளவாயினும் பணம் கொடுக்க வேண்டும் என்றார்.
நீங்கள் பிள்ளைகளை மதிப்பதனுடாக அவர்கள் ஆசிரியர்கள் பெரும் கலைஞர்களையும் மதிக்கிறீர்கள் அல்லவா..
பல இளைஞர்கள் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டுங்கள்.. அல்லது நந்தி மாதிரி மறிக்காமல் விலகி வளி விடுங்கள் அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள்.. பயப்பிடாதீர்கள் உங்கள் கதிரைகள் பறி போய்விடும் என்று..
அவர்களுக்கு தெரியும் உங்களில் பலர் அமைப்புகளுக்காக சுயநலமற்று இரவு பகலாக உழைப்பது .

அவர்கள் ஒருபொழுதும் உங்கள் உழைப்பையோ, உங்கள் திறனையோ குறைத்து மதிப்பிட மாட்டார்கள்..
கலையாசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் மாணவர்களை இலவசமாக எந்த ஒரு நிகழ்ச்சியும் செய்ய விடாதீர்கள். பெறும் பணத்தில் உங்கள் செலவு போக மிகுதியை பிள்ளகளுக்குக் கொடுங்கள். அவர்கள் தனியே நிகழ்ச்சி செய்யச் சென்றாலும் அதையே கடிப்பிடிக்கச் சொல்லுங்கள். ஏதாவது நிதி சேகரிப்புக்கு நிகழ்ச்சி செய்தாலும் நீங்கள் பணத்தைப் பெற்று உங்கள் பணமாக உங்கள் பெயரில் அந்த உதவியை நீங்கள் விரும்பியவர்களுக்குச் செய்யுங்கள்..

உங்களை வைத்து மற்றவர்கள் வியாபாரம் செய்ய அனுமதியாதீர்கள்..

நாடக இயக்குனர்களுக்கு ..இங்கு கடந்த காலத்தில் நடைபெறும் நாடகங்கள் பெரும்பாலும் ஒலிப்பதிவு செய்து விட்டு வாயசைத்தலே நடை பெறுகிறது சில நகைச்சுவை நாடகங்களைத தவிர.. போலிக்கு ஒலிவாங்கி பூட்டி விட்டு வாயசைத்து நடித்த நாடகங்களும் பார்த்தேன் ..

அதை நிறுத்தி உண்மையான நாடகத்துக்கு வாருங்கள் முடியும் ..நாங்கள் குறைந்தளவு வளங்களுடனே நேரே பாடி இபேசி இசையமைத்து செய்திருக்கிறோம் ஏன் உங்களால் முடியாது முடியும். 20 வருடங்களுக்கு முன் ஒஸ்லோவில் நடைபெற்றுள்ளது.. மீண்டும் எழுந்து வருக ..
மற்றும் ஒலிஇ ஒளி அமைப்பின் முக்கியத்தை உணர்ந்து அவர்களுக்குரிய பணத்தை, மதிப்பைக் கொடுத்து நிகழ்ச்சிகளைச் சிறப்பாக்குங்கள் இருட்டினிலே குருட்டாட்டம் இனியும் வேண்டாம்

என்னை விட பல கெட்டிக்காரர்கள் இருக்கிறீர்கள் உங்களால் முடியும். மாறி மாறி முதுகு சொறியாமல் மன நிறைவு தரும் நிகழ்ச்சியத் தாருங்கள்.

பி.கு ..யாரையும் குறை கூறும் நோக்கமல்ல. எனது ஏக்கம் எதிர்பார்ப்பு இஆதங்கம் .கீழே நண்பர் லிமலநாதனின் விமர்சனத்தையும் வாசியுங்கள்

இப்படிக்கு நட்புடன்
உங்கள் பத்மநாதன்

டாக்டர் லிமலநாதன் அடுத்தநாள் நிகழ்ச்சி பற்றி எழுதிய விமர்சனம்

2016 ம் ஆண்டின் இரண்டாம் நாள் மாலைஇ ஒஸ்லோ நகரில் -4 பாகை, மெல்லிய பனித்தூறல் வீதிகளை மெல்ல நிரப்பிக்கொண்டிருக்க விழா ஒன்றிற்குச் சென்றோம்.
ஏற்பாட்டாளர் வேறு யாருமல்ல ஒஸ்லோவில் நன்கறியப்பட்ட பத்மநாதன் அல்லது செல்லமாக பத்தர் என அழைக்கப்படும் பத்தருடைய பாடசாலை மாணவர்கள்.

பத்தர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி பழைய மாணவன்இ மாரீசன்கூடல் சொந்த ஊர். க.பொ.த உயர்தரம் கணிதப்பிரிவில் படித்து பல்கலைகழகத்தில் பொறியியல்பீடம் புகுந்தார்.
மகாஜனக்கல்லூரி மாணவர்களுக்கு கல்வி மட்டும் கற்றுக் கொடுக்கும் கூடமாக இருந்ததில்லை, இதற்கு இன்று உலகப்பந்தின் பரிதியெங்கும் பரந்திருக்கும் பல்கலைவிற்பனர்களான பழைய மாணவர்கள் சான்று, இதற்கு பத்தரும் விதிவிலக்கல்ல.

இன்றைய நிகழ்வுகள் குறிப்பிட்டபடியே சுமார் 5 மணிக்கு போசனத்துடன் ஆரம்பமானது. சுவையான உணவை பெற்றோர்கள் பம்பரமாய்ச் சுழன்று பரிமாறினார்கள்.
கலைநிகழ்ச்சிகள் பேர்கன் நகரிலிருந்து வருகைதந்திருந்த மீரா- தீபா திருச்செல்வம் சகோதரிகள் ஒஸ்லோ கலைஞர்களுடன் இணைந்து அற்புதமாக தந்தார்கள். மீரா- தீபா சகோதரிகளைப்பற்றி கேள்விப்பட்டிருந்த போதும் அவர்களுடைய ஆற்றலை இரசிக்கும் சந்தர்ப்பம் இன்று தான் கிடைத்தது. அந்த இளங்கலைஞர்கள் ஒஸ்லோ இளையோருடன் இணைந்து அரங்கை கட்டிப்போட்டு விட்டார்கள். புல்லாங்குழல்இ கிட்டார்இ வாய்ப்பாடலென அசத்தினார்கள். ஓஸ்லோ இளையோரும் வாய்ப்பாடல், வயலின், மிருதங்கமென ஈடுகொடுத்தார்கள்.
மிருதங்க கலைஞர் அஸ்மிருதன் மீண்டும் ஒருமுறை வளர்ந்துவரும் கலைஞன் தானென நிரூபித்தார்.

அஞ்சலியின் நடனம் இசைக்கு ஈடுகொடுத்ததுஇ ஆயினும் அரங்கினளவு போதாமையால் அவரது அசைவுகள் மட்டுப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
தொடர்ந்து பல மாணவர்கள் பாடல்களை வழங்கினார்கள், இராகவி ஒரு கடினமான பாடலை எடுத்து அழகாக பாடினார்.
கே.பி. சுந்தராம்பாளை கண்முன் கொண்டுவந்த மாணவியை பாராட்டாமல் இருக்கமுடியாது.

கிட்டார், றம்செட்டுடன் மேடை ஏறிய அக்காவும், தம்பியும் ஏதோ சாதுவாகத்தான் தொடங்கினார்கள்இ தம்பியின் றம் வாத்தியத்துக்கு மாறிக்கொண்ட அக்கா அரங்கை கதிகலங்கவைத்துவிட்டார்.

இடைவேளையில் தேனீர்இ சிற்றுண்டியை முடித்து ஆரம்பமானது நாடகம். மாணவர்களே பாத்திரங்களை ஏற்று நடித்தனர், கருப்பொருளோ அவர்கள் அன்றாட வாழ்வில் தங்கள் வீட்டினுள் எதிர்கொள்ளும் புரியாதபுதிர்களான பெற்றோர்கள். யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டாக பனிக்காட்டில் கிடுகுவேலி கட்டிவாழும் முதல்தலைமுறையினருடனான முரண்களைப் பேசியது.
மாணவர்களுடன் சேர்ந்து ஆசானும் ஒரு செந்தோழராக கூத்துப்பாடலுடன் தோன்றினார். அரங்க அமைப்புஇ ஒலிஇ ஒளி என குறைகளை கூறமுடியும்இ ஆனால் இதையெல்லாம் தாண்டி யதார்த்தத்தை மாணவர்களின் கண்களினூடே பார்க்கவைத்தது நாடகம்.

தொடர்ந்து பல மாணவர்கள் பாடல்கள் தந்தனர். நிகழ்வின் இறுதிவரை பார்க்கமுடியாமல் இரவு 10 மணியுடன் திரும்பவேண்டி இருந்தது கவலை தான்இ ஆனாலும் இறுக்கமில்லாதஇ ரம்யமான சூழல் அரங்கம்முழுவதும் நிலவியது.

வழமையான நிகழ்வுகள் போல் எந்த ஒரு கனவானும் ஒலிவாங்கியை பிடித்து வீறு நடை போடவில்லை. ஒலிவாங்கி எந்த ஒரு கனவான் கையிலும் சொற்பொழிவுக்கென சிக்கவில்லை.
எல்லாம் மாணவர்களாலேயே மிகவும் எளிமையாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது ஆறுதலை தந்தது. மகாஜனக்கல்லூரியின் பழைய மாணவன் இளவாலை விஜேந்திரனின் கணிசமான உழைப்பிலும், ஆழுமையிலும் இயங்கும் ஒஸ்லோ முத்தமிழ் அறிவாலய 25 வது ஆண்டு நிறைவிற்கு சென்று திரும்பியபோதும் இத்தகையதோர் நிறைவு மனதில் தோன்றியது. ஆனாலும் அப்போது அதை பதிவுசெய்யமுடியவில்லை.

கடந்த முப்பது தசாப்தம் புலம்பெயர்ந்து வாழும் எம்மிடம் விட்டுச் சென்றதும்இ இன்றும் தொடர்ந்து நிலவுகின்றதுமான அவலம்இ தடி எடுத்தவன் எல்லாம் சண்டைக்காரன் என்பது போல ஒண்டிப்பிளைக்கும் கவிஞர்களையும்இ கலைஞர்களையும்இ பத்திரிகைகாரர்களையும் படைப்பாளிகளையும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு விட்டுச்சென்றது தான்.

எமது அடுத்த தலைமுறைக்கு இடம்கொடுத்து படிப்படியாக ஒதுங்கிக்கொள்வதுஇ முதலாம் தலைமுறையினரின் குரலாக அவர்கள் இங்கு ஒலிப்பதற்கு இன்றியமையாத்து என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். தாயகமக்கள் தமக்குக் கிடைக்ககூடிய இடைவெளிக்குள் நகர ஆரம்பித்துவிட்டார்கள். புலம்பெயர் உறவுகள் யதார்த்தத்தை எப்போ புரிந்து கொள்ளும்? சிந்தனையை சிறகடிக்க வைத்த மாணவர்களுக்கும்இ ஆசானுக்கும் நன்றிகள் பல.

Leave a Comment

 

Scroll to top