உயர்ந்த மனிதரின் பெரிய சிலை திறப்பு Reviewed by Momizat on . நெலசன் மண்டேலாவின் உடல் கடந்த ஞாயிறன்று அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உலகிலேயே அவருக்கான மிகப் பெரிய சிலை, தென் ஆப்ரிக்கத் தலைநகர நெலசன் மண்டேலாவின் உடல் கடந்த ஞாயிறன்று அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உலகிலேயே அவருக்கான மிகப் பெரிய சிலை, தென் ஆப்ரிக்கத் தலைநகர Rating: 0
You Are Here: Home » Front page » உயர்ந்த மனிதரின் பெரிய சிலை திறப்பு

உயர்ந்த மனிதரின் பெரிய சிலை திறப்பு

நெலசன் மண்டேலாவின் உடல் கடந்த ஞாயிறன்று அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உலகிலேயே அவருக்கான மிகப் பெரிய சிலை, தென் ஆப்ரிக்கத் தலைநகர் பிரிட்டோரியாவில் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.

mandelaவெண்கலத்திலான மண்டேலாவின் அந்த உருவச் சிலை, ஒன்பது மீட்டர்கள் உயரம் கொண்டது. அதன் எடை நான்கரை டண்கள்.

பிரிட்டோரியாவில் அரச தலைமையகமான யூனியன் கட்டிடத்துக்கு எதிரேயுள்ள புல்வெளியில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமை மற்றும் இணக்கப்பாட்டை அவர் முன்னெடுத்தார் என்பதை குறிக்கும் வகையில் அவரது இரண்டு கைகளும் நீட்டி விரித்த வண்னம் அந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பரந்து விரிந்த அவரது கைகள் அனைவரையும் அணைத்துச் செல்ல அவர் முற்பட்டதை சுட்டிக்காட்டுகிறது என்று சிலையை திறந்து வைத்த நாட்டின் அதிபர் ஜேக்கப் ஜூமா தெரிவித்தார்.

தென் ஆப்ரிக்காவில் இணக்கப்பாட்டுத் தினமாக அனுசரிக்கப்பட்டுவரும் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி மண்டேலாவின் உருவச் சிலை, திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு இன மோதல்கள் முடிவுக்கு வந்த நாளாக டிசம்பர் 16 ஆம் தேதி கருதப்படுகிறது.

சிறுப்பன்மை வெள்ளையின மக்களின் ஆட்சி அங்கு இருந்தபோது, அந்த தினம் பழங்குடியின ஜூலுப் படையினரை ஆப்ரிக்கானர்கள் வெற்றி கொண்ட நாளாக கடைபிடிக்கப்பட்டது.

Leave a Comment

 

Scroll to top